"இதுதாண்டா போலீஸ்"..!!! மக்களால் நெகிழ்ந்து பாராட்டப்படும் தலைமை பெண் காவலர்..!!!

 

 -MMH

 அன்னூர் காவல் நிலைய தலைமை பெண் காவலரின் மனிதாபிமானமிக்க  செயலை மக்கள் இருகரம் கூப்பி பாராட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த அன்னூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று சடலத்தைப் பார்வையிட்டு, பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பிரேத பரிசோதனை முடிந்து பிரேதம் சவக்கிடங்கில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த  நிலையில்  நீண்ட நாளாகியும் அந்த  முதியவரின் சடலத்தை யாரும் வந்து பெற்றுக் கொள்ளவில்லை.   இதை அறிந்த அன்னூர்  காவல் நிலைய பெண்  தலைமைக் காவலர் அந்த முதியவரின் சடலத்தை உரிய அனுமதி பெற்று உரிய  சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்துள்ளார்.

போலீஸ் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சிலருக்கு நாங்களும் உங்களைப் போல் மனுசங்கதாங்க  எங்களுக்கும் மனிதாபிமானம் உள்ளது என்று  எடுத்துக்காட்டகூடிய இந்த செயல் அனைத்து காவலர்களையும்  நெஞ்சை நிமிர்த்தி கம்பீர நடை போட வைத்துள்ளது. '

மனிதம் மரிக்கவில்லை' என்ற செயலுக்கு எடுத்துக்காட்டாக இந்த பெண் தலைமை காவலர் செயல் அமைந்துள்ளதாகவும், ' இதுதாண்டா போலீஸ் ' என்று பெருமையோடு  அப்பகுதி மக்கள் நெகிழ்ந்து பாராட்டுகளை அள்ளி குவித்து வருகின்றனர். 

 நாளை வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments