ரோட்டில் கிடந்த கழுதை மான் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் பொதுமக்கள்!!

  -MMH

   கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள சோலையார் டேம் அருகில் முருகாளி எஸ்டேட் செல்லும் வழியில் ரோட்டில் கழுதை மான் ஒன்று அடிபட்டு கிடந்ததை அவ்வழியே வந்த பொதுமக்கள் பார்த்தனர். அதை  வனவிலங்கு அதிகாரியிடம் தெரிவித்தனர்.

மானாம்பள்ளி வனவிலங்கு அதிகாரிகள் உடனே அப்பகுதிக்கு வந்து ரோட்டோரத்தில் அடிபட்டு கிடந்த கழுதை மானை மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைதனர்.

அந்தக் மான் சிகிச்சை பெற்று வருகிறது. இதனால் கழுதை மானை பற்றிய தகவல் தெரிவித்த பொதுமக்களை வனவிலங்கு அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார், வால்பாறை.

Comments