போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்! கோவை மாநகர போக்குவரத்து போலீசார் அதிரடி!!

    -MMH

கோவை மாநகரில் விபத்துகளையும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு விதிகளை அமல்படுத்தி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைப்பிடிக்கும் மனப்பான்மையை கொண்டுவரவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. 

அதோடு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 8 மாதங்களில் சீட்பெல்ட், ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 20 ஆயிரத்து 628 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகரில் கடந்த 1.1.2021-ம் தேதி முதல் 31.8.2021-ம் தேதி வரை 8 மாதங்களில் விபத்து தரவுகளை ஆய்வு செய்ததில் 57 இறப்பு விபத்து வழக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 59 பேர் உயிரிழந்தனர். இதுவே கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 39 வழக்குகள் பதிவாகி இருந்தன. இதுபோன்று 455 இறப்பு இல்லாத விபத்து வழக்குகளில் 491 பேர் காயமடைந்திருக்கின்றனர். அத்துடன் இருசக்கர வாகனங்களில் ஹெல்மட் அணியாமல் சென்ற 550 பேர், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை இயக்கிய 20 ஆயிரத்து 78 பேர் என மொத்தம் 20, 608 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. 

இதுவே கடந்த ஆண்டில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 487 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் இயக்கிய 20 ஆயிரத்து 578 பேருக்கும் என மொத்தம் 21 ஆயிரத்து 65 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக 456 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments