கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி!!

  -MMH

   கோவை: சம்பளம் கிடைக்காத விரக்தியில் வாலிபர் ஒருவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஸ்ரீராம் இன்ஜினியரிங் கம்பெனியில் வேலை செய்வதாகவும், கடந்த சில மாதங்களாக சரிவர சம்பளம் கிடைக்காததால் மன விருத்தி அடைந்த அவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 5 லிட்டர் டீசல் உடன் தீக்குளிக்க முயன்றுள்ளார். உடனே அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து அவர் வைத்திருந்த டீசல் பறித்ததால் அசம்பாவிதம் சம்பவம் தவிர்க்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு சம்பளம் பெற்று தருமாறு போலீசாரிடம் கூறினார். பின்னர் தீக்குளிக்க முயன்ற வாலிபரை ஜீப்பில் ஏற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments