போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் பேருந்து நிறுத்தம்!! இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா?!

 -MMH

கோவை மாவட்டம் சுந்தரா புரத்தில் முக்கியமான சாலைகள் சந்திக்கும் இடத்தில் போக்குவரத்து சிக்னல் உள்ளது இதில் சுந்தரா புரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மதுக்கரை மார்க்கெட் சாலையிலுள்ள சுந்தராபுரம் பேருந்து நிறுத்தத்தினால் மிகவும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

சுந்தரா புரத்தில் இருந்து மதுக்கரை மார்க்கெட் வழியாக செல்லும் பேருந்துகள் சுந்தரா புரத்தில் உள்ள நான்கு முனை  சந்திப்பிலிருந்து மதுக்கரை மார்க்கெட் சாலைக்கு திரும்பியதும் அங்கு உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றி விட்டு செல்கிறார்கள் அப்படி பேருந்தை நிறுத்தும் போது பின்னால் வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் சிக்னல் பச்சை விளக்கில் இருந்து சிகப்பு விளக்குக்கு மாறும் சமயத்தில் முன்னால் செல்லும் பேருந்து சாலையை கடந்தவுடன் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் பின்னால் செல்பவர்கள் சாலையின் நடுவே நிற்கும் சூழ்நிலை உருவாகிறது.

அப்பொழுது பொள்ளாச்சி சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை விளக்கு எரிந்து செல்லலாம் என்ற உத்தரவு  வருகிறது. இதுபோன்ற சமயங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கருதுகிறார்கள் எனவே இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்பதே பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

S.ராஜேந்திரன்.

Comments