பொதுமக்களின் விபரீத செயல்!! போனால் திரும்பாது உயிர்!!

        -MMH

 கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன.. இதில் வரும் சுற்றுலா பயணிகள் சிலர் தடைசெய்யப்பட்ட ஆறுகளில் ஆபத்துகளை உணராமல் குதுகலமாய் குளித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

வால்பாறை ஒரு மிக அருமையான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தத்தில் அரசு நிர்வாகத்தால் தடை செய்யப்பட்ட வெள்ளம் பெருகி ஓடும் ஆறுகளில்  அறிவுறுத்தலையும் மீறி குளித்து கும்மாளம் அடித்து வருகின்றனர். இது தங்களின் உயிருக்கே உலை வைக்கும் என்பதை மறந்து இவர்கள் செய்யும் காரியத்தினால்  அங்கிருக்கும் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளின் ஆபத்தைக் கண்டு அரசு நிர்வாகம் உடனே மக்களை எச்சரித்து அவ்விடங்களில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மக்களின் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யா குமார்,செந்தில் குமார், வால்பாறை.

Comments