பொள்ளாச்சியில் மீண்டும் தொடங்கிய ஆதார் திருத்தம் சேவை..!!

  -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி தலைமை தபால் நிலையம் மற்றும், 22 துணை தபால் அலுவலகங்களில் ஆதார் திருத்த சேவை வழங்கப்படுகிறது.

பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிக்கை கூறியதில் பொள்ளாச்சி தபால் கோட்டத்தில், மக்களின் வசதிக்காக, ஆதார் சேவை முகாம் மீண்டும் துவங்கியுள்ளது.

பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம் மற்றும் உடுமலை, ஆனைமலை, அங்கலக்குறிச்சி, குடிமங்கலம், கணியூர், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, கொமரலிங்கம், குறிச்சிக்கோட்டை துணை அஞ்கலகங்களில் ஆதார் சேவை முகாம் நடக்கிறது.

மேலும், மகாலிங்கபுரம், மாக்கினாம்பட்டி, முடீஸ், மடத்துக்குளம், மலையாண்டிபட்டிணம், நெகமம், பெதப்பம்பட்டி, பூலாங்கிணர், வேட்டைக்காரன்புதுார், ஜமீன் ஊத்துக்குளி, வால்பாறை, காந்திநகர் மற்றும் வெங்கடேசாமில்ஸ் துணை தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் செய்து தரப்படுகிறது.

புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் இல்லை. புகைப்பட மாற்றம், கைவிரல் ரேகை புதுப்பித்தல், கண் கருவிழி புதுப்பித்தல் சேவைகளுக்கு கட்டணமாக, 100 ரூபாய் செலுத்த வேண்டும்.

பெயர், முகவரி, பிறந்த தேதி மாற்றம், மொபைல் எண் பதிவு மற்றும் புதுப்பித்தல் மற்றும் இ-மெயில் பதிவு மாற்றம் போன்ற சேவைகளுக்கு, 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேற்கொண்ட அலுவலகங்களில், உரிய ஆவணங்களுடன் சென்று, ஆதார் சேவையை பெற்று, பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments