பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் - கோவைப் பெண் காவலர்களுக்கான, விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்..!!
கோவை கே எம் சி ஹெச் மருத்துவமனை சார்பாக பெண் காவலர்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்தாய்வு கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் கூட்டரங்கில் மற்றும் காவலர் பயிற்சி பள்ளி கூட்டரங்கிளும் நடத்தப்பட்டது. இதில் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவது பற்றியும், இந்நோய் ஏற்பட்டால் எம் மாதிரியான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்நோயை ஆரம்பத்தில் கண்டறியும் முறைகளைப் பற்றியும் மார்பக புற்றுநோய் சிகிச்சை மைய மருத்துவர் ரூபா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் இரண்டு பெண்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில்தான் மார்பகப் புற்றுநோய் கண்டறியப் படுவதாகவும் ஆனால் ஆரம்பநிலையிலே கண்டுபிடித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று கூறினார். பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும் இந்த மார்பு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் இதன் அறிகுறிகளாக, மார்பகத்தில் கட்டி, வலி, கசிவு போன்றவைகள் ஏற்படும்.
இவ்வறிகுறிகள் இருப்பின் உடனடியாக புற்றுநோய் மருத்துவரை அணுகி தேவைப்படும் பரிசோதனைகளை செய்து புற்று நோயாக இருப்பின் அதற்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்தால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர காவல் குற்றப் பிரிவு துணை ஆணையாளர் உமா IPS, கதிரியக்க நுண்துளை மருத்துவர் டாக்டர் மேத்யூ செழியன் மற்றும் பெண் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments