திசையன்விளையில் அப்சல் டெக்ஸ்டைல்ஸ் துணி கடையில் நூதன திருட்டு!! சமூக வளைத்தளங்களில் பரவும் வீடியோ!!

 -MMH

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள தாமரை மொழி கிராமத்தை சேர்ந்த செல்வமதன் திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் உள்ள அப்சல் டெக்சஸ் கடையில் செல்வமதன்துணி எடுக்க சென்றுள்ளார் அப்போது அவர் ட்ரையல் ரூம்ல போய் ஒவ்வொரு துணியாக மாற்றியுள்ளார்.

அப்பொழுது அவர் அந்த இளைஞர் பணியன் ஒன்றுக்கு மேல் ஒன்றாக போட்டுள்ளார் அதோடு மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த லுங்கிக்குள் துணியை ஒவ்வொன்றாக சுருட்டி வைத்துள்ளார். 

இது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த  கடை ஊழியர்கள் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து அவர் திருடிய துணியெல்லாம் வாங்கியுள்ளனர். இதுகுறித்து  காவல் நிலையத்தில் புகார் எதுவும் கடை உரிமையாளர்  அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-அன்சாரி, நெல்லை.

Comments