சிங்கம்புணரி சுற்று வட்டாரத்தில் நாளை மின்தடை!

-MMH

         சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி துணை மின் நிலையத்தில் நாளை (18.09.2021) சனிக்கிழமையன்று பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.

இந்தப் பராமரிப்புப் பணியின்போது சிங்கம்புணரி துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகளான சிங்கம்புணரி, பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிபட்டி, செல்லியம்பட்டி, செருதப்பட்டி, அரசினம்பட்டி, குமரிபட்டி, நாட்டார்மங்கலம், சதுர்வேதமங்கலம், அ.காளாப்பூர், கண்ணமங்களப்பட்டி, கருங்காலக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

-அப்துல்சலாம் & ராயல் ஹமீது.

Comments