பிறந்த நாளே இறந்த நாள் ஆக மாறிய சோகம்..!!வாலிபரின் விபரீத முடிவால் கலங்கி நிற்கும் குடும்பம்..!!

   -MMH

   காதலி இறந்ததால்  விரக்தியடைந்த வாலிபர் தன் பிறந்தநாளன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் எஸ் எஸ் புறம் 4 வது வீதியைச் சேர்ந்தவர் பூபேஷ் வயது 23. ஸ்டிக்கர் ஓட்டும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 8 ஆண்டு காலமாக தன்னோடு படித்து வந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். மாணவியும் இவரை காதலித்துள்ளார்.

இந்த விஷயம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே காதலுக்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர்  மாணவிக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க முடிவு செய்தனர். இதனால் மனமுடைந்த மாணவி கடந்த மாதம் 16ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த பூபேசும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு  அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து அவரின்  உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று பூபேஷ் உடைய  பிறந்தநாள். போன பிறந்தநாள் தன்னுடன் இருந்த காதலி இந்த பிறந்த நாளுக்கு தன்னுடன் இல்லை என்று எண்ணி மனம் உடைந்த பூபேஷ் தன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன் மகனுடைய பிறந்த நாளே இறந்த நாள் ஆக ஆகிவிட்டதே என்று அவரின் பெற்றோர்  மிகவும் மனவேதனையுடன் கலக்கத்தில் உள்ளனர்.

தற்கொலை ஒரு கோழைத்தனமான செயல், சட்டத்துக்குப் புறம்பானது. வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி வரக்கூடியது தான். ஆகவே நமக்குத் துன்பம் நேர்ந்தால் அதை பொறுமையாக இருந்து கடந்து செல்ல வேண்டுமே தவிர இதுபோன்ற தவறான முடிவுகளை எடுத்து விடக்கூடாது என்று சமூக ஆர்வலர்களும், மனநல மருத்துவர்கள் பலரும் மக்களை அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments