மக்களை குஷிப்படுத்திய தமிழக அரசின் இன்னுமோர் சூப்பர் அறிவிப்பு..!!!

  -MMH

    10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலம் முடிந்து தேர்தலில் வெற்றிபெற்ற திமுக  சில மாதங்களுக்கு முன்பு  தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தது .

தேர்தல் பிரச்சாரத்தின் போது மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி இருந்தார். அதில் ஒன்றுதான் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் நகை கடன் தள்ளுபடி.

தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை தமிழக அரசு அறிவிப்பு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக தங்கள் வாக்குறுதியை மெய்ப்பிக்கும் விதமாக கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்க அடமான தாரர்களின் 5 சவரன் வரையுள்ள நகை  கடன்கள் 110 விதியின் கீழ் முழுவதுமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 6000 கோடி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்று தமிழக அரசு எப்போதும் விரும்புவதாகவும் அவர் சட்ட சபையில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த கடன் தள்ளுபடி சலுகை கடந்த மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு செல்லும் என்ற நற்செய்தியை அவர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு என்ற வாசகத்துக்கு இணங்க முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக மக்கள் பாராட்டி வருகின்றனர்.

-ரஞ்சித்குமார், திருச்செங்கோடு.

Comments