சேரன்மாநகர் கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!!

     -MMH

கோவை மாவட்டம் சேரன்மாநகர் பகுதியில் கேஎம்சிஎச் மருத்துவமனை மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து ஏற்பாடு செய்த மெகா கொரோனா  தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதியார் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மதிப்பிற்குரிய திரு‌.பையாக்கவுண்டர் அவர்களின் ஏற்பாட்டில் காளப்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் திரு.பொன்னுசாமி அவர்கள் மேற்பார்வையில் வார்டு 32அ வட்ட கழக,

பொறுப்பாளர் சி.செல்வராஜ் அவர்கள் தலைமையில் நேற்று (26.09.2021) சேரன் மாநகர் 4 ஆவது பேருந்து நிறுத்தம் அருகில் மாநகராட்சி நடுநிலை பள்ளியில் , கோவை மாநகராட்சி மற்றும் KMCH இணைந்து நடத்திய மெகா தடுப்பூசி  மேலாவில் மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு பயனடைந்தனர். இந்த மெகா கேம்பில் 382 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. மேற்படி தடுப்பூசி மையத்தை ஏற்படுத்தி கொடுத்த கோவை மாநகர மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மதிப்பிற்குரிய திரு.பையா கவுண்டர் அவர்களுக்கு  பொதுமக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

-முஹம்மது சாதிக் அலி.

Comments