மது விருந்து கொடுத்து பேரனை கொன்ற தாத்தா அதிர்ச்சியில் உறவினர்கள்..!

-MMH

      கோவை மாவட்டம் சிவானந்த காலனி பகுதியில் பகுதியில் பேரனை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு மயங்கி விழுந்து இறந்ததாக கூறி நாடகமாடிய தாத்தா கைது செய்யப்பட்டார். கோவை சிவானந்தா காலனி அண்ணா புது வீதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் விஜயராகவன் (வயது 26). பத்தாம் வகுப்பு வரை படித்த இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

மேலும் மது போதைக்கு அடிமையாகி எந்த வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து இவரது குடும்பத்தார் விஜய ராகவனுக்கு திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தட்டில் உணவை எடுத்துக் கொண்டு தனது அறைக்கு விஜயராகவன் சென்றார். காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் அவரது தாத்தா முருகன் (வயது 67), விஜயராகவன் அறைக் கதவை தட்டி உள்ளார். ஆனால் கதவு திறந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது .உள்ளே சென்று பார்த்தபோது விஜயராகவன் அசைவற்ற நிலையில் மயங்கி கிடந்துள்ளார் .

உடனே அவரை அவரது தாத்தா முருகன் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர் .இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் விஜயராகவன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இதை எடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விஜயராகவன் தாத்தா முருகன் பேரன் விஜயராகவனை ஆள் வைத்து கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது. விசாரணையில் தாத்தா முருகன், விஜயராகவன் எந்த வேலைக்கும் செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் தகராறு செய்து வந்துள்ளது தாத்தா முருகனுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவனுக்கு திருமணம் செய்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையும் பாழாகிவிடும் என்று நினைத்த முருகன், திருப்பதி, நாகராஜ் ஆகியோரிடம் இந்த விஷயத்தை கூறியிருக்கிறார் .

தனது பேரனை கொன்று விடுமாறு கூறியிருக்கிறார் .இதை அடுத்து தாத்தா முருகன் பத்தாயிரம் ரூபாயை திருப்பதி, நாகராஜ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து திருப்பதி ,நாகராஜ் மற்றும் விஜயராகவன் ஆகிய மூவரும் வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்தி உள்ளனர். மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்த விஜயராகவனை திருப்பதி, நாகராஜ் ஆகிய இருவரும் வயரால் கழுத்தை நெரித்து இறுக்கி கொலை செய்துள்ளனர் .பின்னர் விஜயராகவன் இறந்ததை உறுதி செய்த அவர்கள் அப்படியே விஜயராகவன் உடலை கொண்டு வந்து படுக்கையில் போட்டு விட்டு சென்று விட்டனர்.

மீண்டும் மறுநாள் காலை முருகன் விஜயராகவன் அறைக்கு சென்று பார்த்த பொழுது மயங்கி கிடந்த தாக கூறி நாடகமாடி இருக்கிறார். ஆனால் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பிரேத பரிசோதனை மூலம் தெரிய வந்ததால் தற்போது தாத்தா முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் பேரனை மயங்கி விழுந்து இறந்ததாக கூறி கழுத்தை நெரித்து கொன்ற தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-N.V.கண்ணபிரான்.

Comments