டெல்லியில் நடைபெற்ற பெண்காவலர் சபிதா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் - த.மு.மு.க.ஆர்ப்பாட்டம் !!

 

-MMH

            டெல்லியில் நடைபெற்ற பெண்காவலர் சபிதா கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடப்பட்டது.

டெல்லியில் அண்மையில் பெண்காவலர் சபிதா என்பவர் மர்ம நபர்களால் படு கொலை செய்யப்பட்டார்.இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் கண்டன குரல்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பாக கோவை உக்கடத்தில் சபிதாவின் கொடூர படுகொலையை கண்டித்தும் நீதி கேட்டும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அஹமது கபீர் தலைமையில் நடைபெற்ற இதில், த மு மு க மாவட்ட செயலாளர் முஜிபூர் ரகுமான் மாவட்ட செயலாளர் ஜெம்  பாபு பொருளாளர் அப்பாஸ் மற்றும் மாநில மாவட்ட அணி கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் பழனி ஃபாருக்  கண்டன உரையாற்றினார்.தொடர்ந்து அவர்,செய்தியாளர்களிடம் பேசுகையில்,சபிதா கொலை சம்பவத்தில் தவறான காவல் துறையினர் தவறான தகவலை அளிப்பதாகவும்,எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்,நிர்பயா வழக்கில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கபட்டதை போல இதில் தொடர்புடைய குற்றவாளிகளையும் கைது செய்து தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில், சிஎஸ்ஐ விசுவாசபுரம் பாதிரியார் ரமேஷ் ஜோசப் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் பங்கஜவல்லி தமிழ்நாடு முஸ்லிம் பேரவை மாவட்ட செயலாளர் ரஷித்தா பேகம் உட்பட  500க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments