பணம் கொடுத்தால் பட்டா ..!! கோவை மாவட்ட ஆட்சியரிடம் பயனாளிகள் புகார் !!!

 -MMH

   இலவச வீட்டு மனை பட்டா வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட அதிமுக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அன்னூர் தாலுகாவை அடுத்த காரமடை பகுதியைச் சேர்ந்த  பயனாளிகள் கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

தங்களுக்கு வரவேண்டிய இலவச வீட்டு மனை பட்டாகளை அதிமுக நிர்வாகி  அபகரித்து வைத்துள்ளதாகவும், அதை வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம்  கேட்பதாகவும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தையுடன் வந்து நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

இதைப்பற்றி பாதித்த பெண் ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டம், காரமடை பகுதியில் எத்தப்ப நகர் பகுதியில் வசித்துவரும் என்னைப்போன்ற 20க்கும் மேற்பட்டவர்களுக்கு தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைப்பட்டா வழங்க 30 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டு வருகிறார். பணம் தர மறுத்து எங்களைப்போல் உள்ள பயனாளிகளின் வீட்டுமனை பட்டாக்களை பணம் கொடுப்பவர்களுக்கு தந்து விடுவதாகவும் அப்படி பணம் கொடுத்து பட்டாவை பெற்றவர்கள் அந்த இடத்தில் குடிசை போட்டு வசித்து வருவதாகவும் ஆகவே எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டாக்களை திரும்ப எங்களுக்கு பெற்று தர வேண்டும்" என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக மனவேதனையுடன் கண்ணீர் மல்க கூறினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி,  அன்னூர் பகுதி.

Comments