தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் சுகாதார கேடு பொதுமக்கள் பரிதவிப்பு!!

   -MMH    

பொள்ளாச்சி தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வீட்டு கழிவு பொருட்களை ஆங்காங்கே கொட்டப்படுவதால் பஸ் ஸ்டாண்ட் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் இப்பகுதியில் உள்ள கடையில் இருந்து கொட்டப்படும் கழிவுகளால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. 

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கழிப்பிடம் இருந்தாலும் அதைப் பயன்படுத்தாமல் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது மற்றும் மலம் கழிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள குப்பையால் இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பல்வேறு நோய்கள் பரப்பும் பகுதியாக மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தம் சுகம் தரும். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்

என்ற சிந்தனையோடு,

-M.சுரேஷ்குமார்.

Comments