பூங்கா நகர் மேம்பாலத்தில் மயங்கி கிடந்த ஆசாமி ஒரு மணி நேரம் கழித்து போதை தெளிந்ததால் உதவியவர்கள் அதிர்ச்சி..!!

  -MMH

   சென்னை பூங்கா நகர் மேம்பாலத்தில் மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டி வந்த ஆசாமி திடீரென நடு ரோட்டில் மயங்கி விழுந்தார். 

அப்பொழுது அவர் வண்டிக்கு பின்வந்த ஒரு பெண் உட்பட 2 வாலிபர்கள் நடு ரோட்டில் விழுந்து கிடந்த அந்த ஆசாமியை பாலத்தின் ஓரமாக படுக்க வைத்து அவருக்கு முதலுதவி செய்தனர். இருந்தும் அவர் சுய நினைவுக்கு வரவில்லை.

ஒரு மணி நேரமாக காத்திருந்த இளைஞர்கள் மயக்கம் தெளியாத நிலையில் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது.

ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அவருடைய மயக்கத்தை தெளிய வைத்தனர் பின்பு தான் அவர் அதிகமான குடி போதையில் இருந்ததால் தான் நிலைதடுமாறி விழுந்திருக்கிறார் என்று தெரியவந்தது. 

அவர் பெயர் அலெக்ஸ் என்றும் வயது 49 தான் என்றும் சிந்தாதிரிப்பேட்டையில் வேலை செய்வதாகவும் கூறினார். பட்டப்பகலிலேயே இப்படி குடித்துவிட்டு நடு ரோட்டில் விழுந்து கிடக்கும் அவலம் எப்பொழுதுதான் மாறப்போகிறது தெரியவில்லை என்று மக்களும் சமூக ஆர்வலர்களும் புலம்புகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-அப்துல் ரஹீம், திருவல்லிக்கேணி.

Comments

Unknown said…
வாழ்த்துக்கள் தம்பி தொடரட்டும் உங்கள் சமுதாய பணிகள்