கோவை குற்றாலம் இன்று முதல் திறப்பு!!
கோவை அருகே உள்ள கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி கொரோனா காரணமாக சில மாதங்களாக சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்த நிலையில் அரசு வழிகாட்டுதலின்படி திறக்கப்படுகிறது.
கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.
பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்று அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். மேலும் சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் நேரம் அடிப்படையில் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு இருக்கும். என மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறியுள்ளார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.
Comments