பெற்றோர்களே உஷார்..!! மொபைல் போன் விளையாட்டு விபரீதமாக மாறும் அபாயம்..!!!!

  -MMH

   ஆண்ட்ராய்ட் மொபைல் போன் மனித வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாவசிய தேவையாக  மாறிவிட்டது. ஒரு நிமிடம் போனை எங்கேயாவது மறந்து வைத்து விட்டாலும் போன் கிடைக்கும்வரை  நாம் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் நினைத்துப் பாருங்கள் எப்பா ..!

பெரியவர்களிடத்தில் மட்டுமல்ல குழந்தைகளிடத்தில் இப்போது செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். குழந்தைகள் மொபைல் போனை பயன்படுத்தி மொபைல் கேம்களை டவுன்லோட் செய்து விளையாடுவது சமீபகாலத்தில் அதிகரித்துள்ளது. பல குடும்பங்கள் மொபைல் போனின் அநாவசிய பயன்பாட்டினால் சீரழிந்து உள்ளது என்பதை ஊடகங்கள் வாயிலாகவும் பத்திரிக்கை வாயிலாகவும் நாம் எவ்வளவோ பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம். மொபைல் போன் அதிக பயன்பாட்டினால், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தற்கொலை செய்து கொண்ட குழந்தைகள் இன்னும் இதுபோன்ற எத்தனையோ பாதிப்புகளுக்கு குழந்தைகளும் இளைஞர்களும் உள்ளாகியுள்ளனர். மேலும் நம் கற்பனைக்கு எட்டாத விபரீதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

எவ்வளவுதான் மருத்துவ நிபுணர்கள் , சமூக ஆர்வலர்கள்  அறிவுரைகளை வழங்கினாலும் இன்னும் குழந்தைகளிடத்தில் இந்த பயன்பாடு அதிகமாகவே இருப்பது மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.

அதுவும் தற்போது பள்ளிகள் இல்லாத சமயத்தில் ஆன்லைன் கிளாஸ் மொபைல் போன் மூலமாகவே நடந்து கொண்டிருப்பது , குழந்தைகளுக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது, வகுப்புகள் போக மற்ற நேரங்களில் போனிலேயே தங்களுடைய கவனத்தை செலுத்தி வருகின்றன. ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  அதிக  அக்கறை  எடுத்து மொபைல் போன் பயன்பாட்டில் இருந்து பாதுகாத்து வைத்தால் மட்டுமே இந்த தலைமுறையை சிறந்த  தலைமுறையாக மாற்றி அமைக்க முடியும்  என்பது தான் எல்லோருடைய  கருத்து.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா,திருப்பூர்.


Comments