கைப்பையில் கஞ்சா..!!! போலீசில் மாட்டிக் கொண்ட பெண்..!!!

  -MMH

   அன்னூர் பகுதியில் தனது கைப்பையில்  600 கிராம் கஞ்சா வைத்திருந்த பெண்மணியை போலீசார் பிடித்து மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சனிக்கிழமை மாலை அன்னூர் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணியில் இருந்த போது அன்னூர் சந்தைக்கடை பகுதியில் ஒரு இளம்பெண் தனியே நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர் பெண்ணின் அருகே சென்று விசாரணை செய்து இருக்கிறார். விசாரணையின்போது  அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாக காவல் ஆய்வாளரிடம் பதில் பேசி  உள்ளதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த காவல் ஆய்வாளர் அந்தப் பெண் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த பொழுது  கைப்பையில்  600 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அந்தப்  பெண்ணை  காவல் நிலையம் அழைத்து விசாரணை செய்த பொழுது அப்பெண் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா வயது 32 என்பதும்  தன் நண்பர் ஒருவர் விற்பனைக்காக கஞ்சா எடுத்துவர சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார். அவரை மேஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

பொது இடத்தில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள சந்தை  கடைவீதியில் எந்த அச்சமும் இன்றி கஞ்சா விற்பனை செய்து வந்தது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments