கோவையில் கொரோனாவினால் தனியார் கல்லூரி மூடல் !

  -MMH

   கோவையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டேஸ் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது மேலும் வெளிமாநில மாணவ மாணவிகள் ஒரு வாரம் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது இதற்கான கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது

இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி. நர்சிங் கல்லூரியில் கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் நர்சிங் படிக்கும் மாணவிகள் 40 பேருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கல்லூரி மூடப்பட்டது இதனை தொடர்ந்து கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த நர்சிங் கல்லூரியில் கேரளாவை சேர்ந்த மாணவிகளை தனிமைப் படுத்தாமல் பிற மாணவிகளுடன் ஒரே வகுப்பு வகுப்பறையில் ஒன்றாக அமர வைத்துள்ளனர் இதனால் அந்த மாணவிகள் மூலம் பிற மாநிலங்களுக்கும் கொரோனா தொற்று  பரவியது தெரியவந்துள்ளது .இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கேஜி நர்சிங்  கல்லூரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது இந்த சம்பவம் எதிரொலியாக பிற மாநிலங்களிலிருந்து கோவைக்கு வரும் மாணவ-மாணவிகளை ஒரு வாரம் தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்ய  அனைத்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments