கோவை குறிச்சி குளத்தில் போதை மாத்திரை விற்ப்பனை!!

  -MMH

    நைட்ரோஜென் மாத்திரை விற்ற நபரை போலிஸ் கைது செய்து மாத்திரை வாகனத்தை பறிமுதல். 

கோவை இளைஞர்களை குறி வைத்து போதை பொருள் ஆசாமிகள் போதை மாத்திரை வியாபாரம் செய்து வருகின். இந்த நிலையில் கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் இளைஞர் ஒருவர் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்று வருபதனை போலிஸ் அறிந்தனர். 

உடனடியாக ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் கனேஷ் சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த அந்த நபரை போலிஸார் பிடித்தனர். போலிஸ் மேற்க்கொண்ட விசாரணையில் போதைக்காக பயன்படுத்தப்படுகின்ற நைட்ரோசென் மாத்திரை விற்றது தெரிய வந்தன. உடனடியாக நிஷார் போலிஸாரால் கைது செய்யப்பட்டு நிஷாரிடமிருந்து மாத்திரைகள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.

- சீனி,போத்தனூர்.

Comments