ஆழீ யார் - வால்பாறை சாலையோரத்தில் புல் புதர்கள் - சுற்றுலா பயணிகள் அவதி..!!

  -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதி சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடம். அதிக கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட மலைப் பகுதியாக வால்பாறை. வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் பொள்ளாச்சி வழியே ஆழியார் அணை சாலை வழியாகவே வால்பாறை செல்ல முடியும்.

ஆழியாரில்  இருந்து வால்பாறை செல்லும் சாலையோரங்களில் அதிகமாக முள்புதர்கள் தற்போது காணப்படுகிறது. இதனால் வால்பாறைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் தங்கள் வாகனங்களை இயக்குவதற்கு சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வண்ணம் உள்ளனர். மழை மற்றும் பனி மூட்டம் காரணமாக அவ்வப்போது விபத்துக்களும் ஏற்படுகிறது. ஆகவே வாகன ஓட்டிகள் மிக கவனமாக இச் சாலையில் செல்ல வேண்டும் என்று சுற்றுலா துறை அறிவுறுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

 -திவ்ய குமார், செந்தில் குமார்.

Comments