வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகள் மற்றும் பூங்காக்கள் இயங்க தடை!!

  -MMH

   கோவை மாவட்டத்தில் நகராட்சிகளில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து துணி, மால், நகைக்கடைகள் மற்றும் பூங்காக்கள் இயங்க தடை விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவையில் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர் ஒருவாரம் முன்பு வட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமை.

மண்டபங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்திற்கு முன்பு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என திருமண மண்டப உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 பேருக்கு மிகாமல் திருமணம், இதர நிகழ்ச்சிகள் நடத்தலாம்.

கோவை மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் துணி கடைகள் மற்றும் நகை கடைகள் இன்றும் நாளையும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சுரேந்தர்.

Comments