தமிழக அரசு நடத்தும் 'கொரோனா தடுப்பூசி மெகா கேம்ப்.. '!!

  -MMH 

   கொரோனா இந்த சொல்  கொடூரத்தின் உச்சகட்டம். கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முழுவதும் முடிவடையாத நிலையில் இந்தக் கொடிய உயிர்க்கொல்லி நோயில்  இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்றே ஒரே வழி.

இதன் அடிப்படையில் தமிழக அரசு அனைத்து தமிழக  மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி விட  வேண்டும் என்று உறுதி எடுத்து அதற்கான செயல்பாடு திட்டங்களை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் அனைவருக்கும் கொரோனா  தடுப்பூசி என்ற வகையில்  அமைத்து தடுப்பூசி செலுத்தி வருகின்றது. நாளை 12 9 21 அன்று கிராமப்புறங்களில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது, அதற்கான விளக்கப் படத்தையும் வெளியிட்டுள்ளது. கிராமப்புற மக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமை அணுகி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு இந்தக் கொடிய உயிர்கொல்லி நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments