பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!

  -MMH

   கோவை: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு கோவை மாநகர பாஜக ஊடகப் பிரிவின் சார்பில் தங்க  மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை ஒட்டி கோவை மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகளும் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு பாஜக கோவை மாவட்ட ஊடகப் பிரிவின் சார்பில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு தேவையான படுக்கை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.  

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் திரு நந்தகுமார் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத் தலைவர் மதன் ,மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான்சன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் திரு சபரிகிரீஷ், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரேம்குமார், துணைத்தலைவர் சிவானந்தம், செயலாளர்கள் மணிக்குமார், சுதாகர், மண்டல் தலைவர்கள்  கார்த்திக், மணீஸ்,கௌரி , நாகராஜ் சரவணன் ராமநாதன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments