சிங்கம்புணரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலமடைய வேண்டி, வயிற்றுப் பிள்ளையார் கோவிலில் பிரார்த்தனை!

 -MMH

கடந்த 25ஆம் தேதி தனது பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். அண்மையில் உயர் சிகிச்சைக்காக துபாய் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவர் பூரண நலமடைந்து தாயகம் திரும்ப வேண்டி சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. 300 ஆண்டுகள் பழமையான வயிற்றுப் பிள்ளையார் கோவிலில்  விநாயக சதுர்த்தி நாளான இன்று விஜயகாந்த் நலம் பெற வேண்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த சிறப்புப் பூஜையில் சிங்கம்புணரி ஒன்றிய தேமுதிக செயலாளர் ராமதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளி அணிச் செயலாளர் வாஞ்சிநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் உமா சோனைமுத்து, மாவட்ட பிரதிநிதி சோனைமுத்து, ஒன்றிய பொருளாளர் முருகேசன், பேரூர் கழக துணைச் செயலாளர் லட்சுமணன், பொன்னுசாமி, ரமேஷ் மற்றும் சிங்கம்புணரி நகர, ஒன்றிய கிளைக்கழக தேமுதிகவினர் பங்கேற்றனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments