சிங்கம்புணரி மயானத்தில் தலைக்காயம், தீக்காயத்துடன் அடையாளம் தெரியாத ஆண் பிணம்! காவல்துறை விசாரணை!

 

-MMH

      சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் வேங்கைப்பட்டி சாலையில் பொது மயானம் உள்ளது. இன்று காலை மயானத்தின் காவலாளி தனது பணியை துவக்க அங்கு வந்தபோது அந்த வளாகத்தில் உள்ள கூடத்தில் தலையில் காயங்களுடன், அருகிலிருந்த காய்ந்த சருகுகளால் முகம் எரிக்கப்பட்ட நிலையில், அடையாளம் தெரியாத, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. 

உடனடியாக சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கும், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட காவல் ஆய்வாளர் சீராளன் தலைமையிலான சிங்கம்புணரி காவல்துறையினர், 

தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். சிங்கம்புணரி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-ராயல் ஹமீது & அப்துல்சலாம்.

Comments