நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை !!

 

-MMH

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 86.90 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 91.14 அடியாக உள்ளது.

இன்று காலை வரை பெய்த மழை அளவில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 9 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.குண்டாறு அணை பகுதியில் 7 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், தென்காசியில் 2.6 மில்லி மீட்டரும், மணிமுத்தாறில் 1.2 மில்லி மீட்டரும், சேர்வலாறு, செங்கோட்டையில் தலா 1 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணைக்கு இன்று வினாடிக்கு 889 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 86.90 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று காலை 91.14 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 61 அடியாக உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

குற்றால அருவிகளிலும் தொடர்ந்து தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே பெருவாரியான குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.

நாளைய வரலாறு, நெல்லை செய்தியாளர்

-அன்சாரி. 


Comments