சிங்கம்புணரியில் பொறியாளர் தினவிழா கொண்டாட்டம்!

 

-MMH

       அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மண்டலம் ஒன்பதிற்கு உட்பட்ட சிங்கம்புணரி சங்கத்தின் சார்பாக சங்க அலுவலகத்தில் இன்று (15/09/2021) காலை 10 மணியளவில் பொறியாளர்கள் தினவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

சங்கத்தின் தலைவர் பொறியாளர் C.M. சந்துரு அவர்கள் தலைமையில் நடந்த இந்த விழாவில் மண்டலம் ஒன்பதின் தலைவர் சிவகங்கை பொறியாளர் M.சேகர், மண்டலச் செயலர் மானாமதுரை பொறியாளர் M.சிவக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இவ்விழாவில் மூத்த பொறியாளர்கள் மரு.ஆத்மநாதன், M.தாசில் முகமது, பக்ருதீன் அலி அகமத்.கா, S.சாகுல் ஹமீத், சின்னையா, செந்தூர் பாண்டியன், சக்கரை முகமது உள்ளிட்டவர்களும் நிப்பான் பெயிண்ட் நிறுவனத்தார் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

முன்னதாக நடைபெற்ற சங்கத்தின் பொறியாளர்கள் தின சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் மருத்துவர்களுக்கும், வழக்குரைஞர்களுக்கும் இருப்பது போன்று பொறியாளர்களுக்கும் செயலாட்சி மன்றத்தை (Engineers Council) உடன் அமைக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களை அத்தயாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். உள்ளூர்  வளர்ச்சித் திட்டக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு குழுமங்களில் கூட்டமைப்பின் பொறியாளர்களுக்கும் பிரதிநிதித்துவம் தரப்படல் வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் கொடியை மேனாள் மண்டலத் தலைவர் பொறி.சேதுராமலிங்கம் ஏற்றிவைக்க, மேனாள் மண்டலச் செயலர் பொறி.செந்தில்குமார் பொறியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கிட, சங்கத்தின் செயலாளர் பொறி.அப்துல் காதர் நன்றிகூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

-வெண்புலி.

Comments