நடைமுறைக்கு வராத எல்இடி பேனர்கள் எதற்கு வாகன ஓட்டுனர்களின் வேண்டுகோள்!!

  -MMH

   நடைமுறைக்கு வராத எல்இடி பேனர்கள் எதற்கு? வாகன ஓட்டுனர்களின் வேண்டுகோள்.

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் அட்டகட்டி, ஆளியார் போன்ற பகுதிகளில் சோலார் டிஜிட்டல் மின்விளக்கு போர்டுகள் வைத்து பயனில்லை. ஏனெனில் மேல் வரும் வாகனங்களை நோக்கி அந்த போர்டுகளை வைத்தும் இதுவரை நடைமுறைக்கு வராததால் எதற்கு என்ற கேள்வி எழுப்புகிறார்கள் வாகன ஓட்டுனர்கள். 

இது போன்ற பகுதிகளில் இதுபோன்ற டிஜிட்டல் எல்இடி போர்டுகள் வைத்தும் பயனில்லாமல் சிரமத்திற்கு ஆளாகிறார்கள் வாகன ஓட்டிகள். சோலார் டிஜிட்டல் மின்விளக்கு போர்டுகள் நடை முறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறார்கள் வாகன ஓட்டிகள்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்ய குமார், வால்பாறை.

Comments