கேரளாவில் நிபா வைரசால் சிறுவன் பலி மக்கள் அச்சம் !!

 

-MMH

        கேரளா கோழிக்கோட்டில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த 12 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். சிறுவன் உயிரிழந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று கேரளாவில் இன்று வரை கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் நிபா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் கேரள மக்கள் மட்டுமின்றி கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தமிழ் மக்களும் அச்சமடைந்துள்ளனர் இந்நிலையில் கேரளாவில் நேற்று ஒரே நாளில் 29,682 பேருக்கு  கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Comments