யானை தாக்கியதில் முதியவர் பலி!!

  -MMH

     கோவை நரசீபுரம் அடுத்த விராலியூரை சேர்ந்தவர் சின்னசாமி(63). இவருக்கு ஆட்டுக்காரன் கோவில் மலையடிவாரத்தில் தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், தோட்டத்து வீட்டின் முன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு யானை, சின்னசாமியை தாக்கியுள்ளது. சின்னசாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது படுகாயங்களுடன் சின்னசாமி இருந்தது தெரியவந்தது. இவரை மீட்டு, தொண்டாமுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் உள்ளனர். அங்கு சின்னச்சாமி பரிசோதித்த மருத்துவர் சின்னசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போளுவாம்பட்டி வனத்துறையினர் மற்றும் ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments