நீட் எழுதிவிட்டு அரியலூரில் மாணவி தற்கொலை!!

  -MMH

   அரியலூர் அருகே மேலும் ஒரு மாணவி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துகொண்டார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு கனிமொழி (17), கயல்விழி (19) என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 12ஆம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவியாக வந்த கனிமொழி மருத்துவம் படிக்கும் கனவில் கடந்த ஞாயிற்று கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததால் அவர் சரியாக எழுதவில்லை எனக்கூறி தன்னுடைய தந்தையிடம் வேதனை பட்டுள்ளார். அப்போது, கருணாநிதி மகளை ஆசுவாசப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கனிமொழி இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வெளியில் சென்று வீட்டுக்கு வந்த பெற்றோர் கனிமொழி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அலறி துடித்து கதறியுள்ளனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த போலீசார் கனிமொழியின் சடலத்தை கைப்பற்றி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை. 


      


Comments