அன்று கள்ளிப்பால் கலாச்சாரம்... இன்று பாலியல் பலாத்காரம்..!!! மாணவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய காதலன் .!!!

  -MMH

  கோவை மாவட்டம் சேரன்மாநகர் அடுத்த காந்திமா நகர் பகுதியில் வசிக்கும்  கல்லூரி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரை கலந்து  பாலியல் பலாத்காரம் செய்து  அதை வீடியோ எடுத்து மிரட்டிய  வாலிபரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காந்திமா நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி இவர் கோவையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஜனவரி மாதம் தனியார் கம்பெனியில் வேலை செய்யும்  போத்தனூர் பகுதியை   சேர்ந்த இளைஞருடன் இன்ஸ்டாகிராம் தொடர்பின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்கள் நெருக்கம் அதிகமாகி செல்போன் மூலம்  பேசத் தொடங்கியுள்ளனர், இவர்களின் நெருக்கம் ஒரு கட்டத்தில்  காதலாக மாறி இருவரும் பல முறை  நேரில் சந்தித்து தங்கள் காதலை பரிமாறிக் கொண்டுள்ளனர். சம்பவத்தன்று வாலிபர் தன் காதலியான கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி  ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அங்கு குளிர்பானத்தில் மயக்க மாத்திரையை கலந்து அப்பெண்ணை குடிக்க வைத்துள்ளார். மயக்க மாத்திரை இருப்பதை அறியாத கல்லூரி மாணவி குளிர் பானத்தை அருந்திய  சிலநிமிடங்களில்  மயக்கம் அடைந்துள்ளார். மயங்கிய நிலையில் இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த வாலிபர் அதை வீடியோ மூலமும் பதிவு செய்துள்ளார். மயக்கம் தெளிந்ததும் அம்மாணவி தனக்கு  என்ன நேர்ந்தது என்று கூட தெரியாமல் வீட்டுக்கு சென்றுள்ளார். 

அடுத்த நாள் வாலிபர் மாணவிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தன்னை  சந்திக்க வரும்படி கூப்பிட்டு உள்ளார், மாணவியும் சென்றுள்ளார் இருவரும் பேசிக் கொண்டிருக்கையில்  திடீரென்று வாலிபர் மாணவியை பலாத்காரம் செய்த வீடியோவை காட்டியுள்ளார். இதை  சற்றும் எதிர்பாராத அந்த மாணவி வீடியோவைப் பார்த்து  செய்வதறியாது இருக்கவே தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும்  மறுத்தாள்  வீடியோவை இன்டர்நெட்டில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்றும்  மிரட்டியுள்ளார்,  வேறு வழியின்றி திருமணத்துக்கு ஒப்புக்கொண்ட மாணவியை கோவிலில் வைத்து தாலி கட்டியுள்ளார் அந்த வாலிபர். பிறகு இருவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். தன்னை காதலித்த வாலிபர் ஒரு மோசக்காரன் என்று விளங்கிய மாணவி அவருடன் உள்ள தொடர்பை நிறுத்தி  கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் மாணவியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் வந்து வாழவேண்டுமென்று கூப்பிட்டு உள்ளார் அதை மறுத்த மாணவியை  தகாத வார்த்தையில் திட்டி, ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகவே அந்த மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைப்பற்றி பீளமேடு  காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த வாலிபரை போலீஸார் பிடித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க வேண்டுமெனில், பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து, பெண்ணை சக மனுசியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்காமல்,  எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி, சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது என்ற  ஒரு  சமுதாயத்திற்கான நல்ல  செய்தியுடன்

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி, அன்னூர் பகுதி.

Comments