வேலூர் காட்பாடி பகுதியிலுள்ள ஏரியில் ஆண் சடலத்தை மீட்டு விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை!!

     -MMH
வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூர் பகுதியிலுள்ள ஏரியில் சடலம் ஒன்று மிதப்பதாக விருதம்பட்டு காவல்துறைக்கும், காட்பாடி தீயணைப்பு துறைக்கும் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் சடலத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். 

மேலும் விசாரணையில் விருதம்பட்டு காளியம்மன் தோப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயதான அக்பர் என தெரியவந்தது. இவர் பிளாஸ்டிக் குடம் செய்யும் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு ஜாலியாக இருந்ததாக தெரியவருகிறது. அக்பர் காணவில்லை என்ற புகார் இருந்த நிலையில், தற்போது அக்பர் சடலமாக  மீட்கப்பட்டிருப்பதால் விருதம்பட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-P.ரமேஷ், வேலூர்.

Comments