தஞ்சையில் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்!!

  -MMH

    தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ்  தலைமையில் இன்று கொரானா சிறப்பு தடுப்பூசி முகாம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆரம்ப பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் நடைபெற்றது.


தஞ்சை மாவட்டத்தில் சுமார் 1300 இடங்களுக்கு மேல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு இன்று முழுவதும்  தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையுடன் சென்று பயனடைந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் .

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எல்லா  நாளும் செயல்படக்கூடிய கொரானா சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது .இன்று காலை 7 மணி முதல்  பயனாளிகள் அனைவருக்கும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

அந்தப் பணியினை மருத்துவக் கல்லூரியின்  தலைவர் மற்றும் ஊழியர்கள் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றனர். இந்தப் பணிக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாகவும்  நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டு  செயல்பட்டு வருகின்றன. 

நாளைய வரலாறு செய்திக்காக,

-வெ.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments