குறுகிய சாலையை ஆக்கிரமிக்கும் வீட்டு உரிமையாளர்கள், கண்டுகொள்ளுமா மாநகராட்சி.! வாகன ஓட்டிகள் புலம்பல்..!!

-MMH

       கோவை மாவட்டம் போத்தனூர் மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் நீதியில் அமைந்துள்ள தெருக்கள் குறிய சாலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்தில் வாகனங்களை ஓட்டி வரும் நிலை உள்ளது இது ஒருபுறமிருக்க, அந்த குறுகிய சாலையில் வசிக்கும் வீட்டு உரிமையாளர்கள் அங்கு இருக்கும் சாலைகளை ஆக்கிரமிக்கும் விதமாக தண்ணீர் சேமித்து வைக்கும் கேன்களையும்  மண், ஜல்லி, கற்களை ரோட்டில் வைத்து நீண்ட வருடங்களாக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு செய்து செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இதனை உடனடியாக கவனத்திற்கொண்டு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அந்த குறுகிய சாலையை வாகன ஓட்டிகளுக்கு பயன்படுத்தும் விதமாக ஏற்படுத்த வேண்டுமென்று அங்கு பயணிக்கும் வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவை, 

-ராஜேந்திரன்.

Comments