கோவை மாவட்ட மினிலாரி ஏஜென்டுகள் சங்கத்தின் துவக்க விழா கோவையில் நடைபெற்றது !!

-MMH

        காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில்  உள்ள லாரி உரிமையாளர்கள் பொதுநல ட்ரஸ்ட் திருமண மண்டபத்தில் கோவை மாவட்ட மினிலாரி ஏஜென்டுகள் சங்கத்தின் துவக்க விழா நடைபெற்றது. கோவை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகேசன் மற்றும் கோவை மாவட்ட மினிலாரி ஏஜெண்டுகள் சங்கத்தின் தலைவர் ரங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை மூலம் இருக்கும் இடர்பாடுகளை களைவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் துவக்க விழா மூலம் முன்வைக்கப்பட்டன. 

மேலும் சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்து அதன்படி தங்களது கோரிக்கைகளை அரசிடம் நேரடியாக எடுத்துச்சொல்ல இச்சங்கத்தின் மூலம் வழிவகை செய்யப்படும் என்றும் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஒத்துழைப்போடு கோவை மாவட்ட மினிலாரி ஏஜென்ட்கள் சங்கம் துவக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் கிருஷ்ணதாஸ், தலைவர் ரங்கராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராமராஜ், இணைத் தலைவர் பாலு, இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் சங்கர், துணைச் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments