நொய்யல் ஆற்றில் ஆபத்தை உணராமல் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள்!!

 

  -MMH

    கோவை தொண்டாமுத்தூர் நொய்யல் ஆற்றில், நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஆபத்தை உணராமல் இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக, மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது, கன மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.இதனால், வாய்க்கால்களிலும் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் என, வருவாய் துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.இருப்பினும், கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று வந்த பலர், சித்திரைச்சாவடி தடுப்பணை மற்றும் நொய்யலாற்றின் பல இடங்களிலும், நீரில் இறங்கி குளிப்பது, 'செல்பி' எடுப்பது என, ஆபத்தை உணராமல் பலர் விளையாடினர்.ரோந்து பணியில் உள்ள போலீசார், ஆற்றில் இறங்குபவர்களை விரட்டியும் பயனில்லை. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றின் பல இடங்களிலும், பள்ளங்கள் மற்றும் சகதிகள் உள்ளன. இதில், அகப்பட்டால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. பெற்றோரே...பிள்ளைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.

-சுரேந்தர்.

Comments