சுப நிகழ்ச்சியில் பிள்ளையார் பிடித்து வைப்பது ஏன்..?

 

-MMH

    எந்தவொரு சுப நிகழ்ச்சியாக இருந்தாலும், பிள்ளையார் பிடித்து வைப்பது வழக்கம். அவ்வாறு பிள்ளையார் பிடிக்கும்போது, ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும். அதன்படி, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டால் சௌபாக்கியமும் கிடைக்கும். குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டால் செவ்வாய் தோஷம் அகலும்.

விபூதியால் விநாயகர் பிடித்து வைத்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். உத்தியோக உயர்வும் ஞானமும் கிடைக்கப் பெறலாம். வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டால் உடலில் உள்ளேயும், வெளியேயும் உள்ள கொப்பளம் கரையும். உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வழிப்பட்டால் எதிரிகளின் தொல்லை நீங்கும். சர்க்கரையில் பிள்ளையார் வைத்து வழிப்பட்டால் சர்க்கரை நோயின் வீரியம் குறையும். இனிமையான தருணங்கள் வீட்டில் எப்போதும் குடியிருக்கும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.

Comments