மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணியால் சிங்கம்புணரி நகரில் நாளை மின் தடை! உதவி செயற்பொறியாளர் தகவல்!

 

  -MMH

  சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி நகரில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிக்காக புதிய மின் கம்பங்கள் தயார் நிலையில் சாலை ஓரங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியை மின்வாரியம் நாளை துவங்க உள்ளதால், சிங்கம்புணரி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 27.10.2021 புதன்கிழமை காலை 10மணி முதல் மதியம் 2மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிங்கம்புணரி உதவி செயற்பொறியாளர் செல்லத்துறை தகவல் தெரிவித்துள்ளார்.

- ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments