வாகராயம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் உதவி!!

     -MMH

கோவை மாவட்டம் சூலூர் வட்டம் வாகராயம் பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு லட்சுமி டிராவல்ஸ் நிறுவனம், ஸ்ரீகாரா இன்ஜினியரிங் தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து சுமார் ரூபாய் 2.50 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் அருணாவிடம் எல்.ஆர்டி. குழுமத்தின் தலைவர் நிர்வாக அதிகாரி சுஷாந்த் குமார் பட்நாயக் வழங்கினார். பின்னர் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் அருணா கூறுகையில், எல்.ஆர்டி குழுமம் வழங்கிய உபகரணங்கள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மருத்துவ உபகரணங்கள் வாகராயம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்று தெரிவித்தார். தொடர்ந்து சுஷாந்த் குமார் பட்நாயக் கூறுகையில், ஆண்டுதோறும் எல்.ஆர்டி குழுமம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும்,கடந்த ஒரு நோயாளிகள் முகாமிற்கு கணியூர் ஊராட்சி சார்பாக உணவு வழங்கப்பட்டது. அதுபோல் முத்துக் கவுண்டன்புதூர்  ஊராட்சிக்கு பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும், குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள் மூலம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உணவு பொருட்களும், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில், சுமார் 650 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ஸ்ரீகாரா இன்ஜினியரிங் நிறுவன வளாகத்தில் சுமார் 1000 பேருக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் கிராம மக்கள் பயன் அடைந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது என்று தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments