தமிழ்நாடு முழுவதும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு அழகிகளுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து வந்த பலே கொள்ளையன் கைது!!

 

 -MMH

   தமிழ்நாடு முழுவதும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு அழகிகளுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து வந்த பலே கொள்ளையனை போலிசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

கோவை சரவணம்படி அம்மன் கோவில், நியூ வசந்தம் நகர் பகுதியில் கடந்த 13-10-21 அன்று  மாலை ஒரு பெண் அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. 

இந்த நிலையில் நேற்று சிங்காநல்லூர் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது  சந்தேகிக்கப்படும் விதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார் அதில் மர்மநபர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்ததால் போலிசார் அவரை மடக்கிபிடித்தனர். கீழேவிழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து . மருத்துவமனை அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கால் உடைந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து மாவுக்கட்டு போடப்பட்டது. 

மேலும் விசாரணையில் அவன் பெயர் ரவி என்ற ரவிசந்திரன் என்பதும், மதுரை,  சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவன் என்றும் தெரியவந்ததுள்ளது. மேலும் விசாரனையில் பலதிடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளது. 

கோவை சரவணம்பட்டியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாது. கோவையில், கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர், குணியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட இடங்களிலும், மதுரை,தஞ்சை,திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரணை செய்ததில் தமிழகம் முழுவதும் 50 திற்கும் மேற்பட்ட இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளதாகவும், இதுவரை போலிசில் பிடிபடவில்லை என்றும் போலிசாரிடம் தெரிவித்துள்ளான்.

மேலும் சங்கிலியை பறித்ததும் அருகில் உள்ள ஏதாவது அடகுகடையில் அடகுவைத்து பணத்தை பெற்றுக்கொண்டு, விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக வாழ்க்கையை கழித்துள்ளதாகவும், பணம் தீர்ந்ததும் மீண்டும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளான். ஒவ்வொருமுறை சங்கிலி பறிப்பில் ஈடுபடும்போதும் தனது இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை மாற்றியுள்ளதும் விசாரனையில் தெரியவந்துள்ளது. அவனிடம் இருந்து இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த போலிசார், வழக்கு பதிவு செய்து அவனை உடுமலை பேட்டை கிளைசிறையில் அடைத்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments