மனிதம் காத்த திருச்சி மக்கள்; எஸ்.பி பா.மூர்த்தி நெகிழ்ச்சி...!!

  -MMH

   மனிதம் காத்த திருச்சி மக்களை நேரில் அழைத்து, மாவட்ட எஸ்.பி முனைவர் பா.மூர்த்தி நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கொம்பு சுற்றுலா தளம் அருகே கடந்த 2021 அக்டோபர் 11 ம் தேதி காலை 6:30 மணி அளவில், 20 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சியிலிருந்து கரூர் மார்க்கமாக  வேன் சென்றது.

அதன் ஓட்டுநர் அதிவேகமாக இயக்கி சென்றபோது, அவ்வழியே சென்ற அரசு பேருந்து மற்றும் சிறிய வகை கண்டைனர் லாரி ஆகியவற்றின் மீது வேன் மோதி தானாக சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 16 பேர் காயங்களுடன் வேனுக்குள் சிக்கித் தவித்துள்ளனர். இதனை கண்ட, அப்பகுதியினரும் பொதுப்பணித்துறை ஊழியர்களும், நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணிபுரிந்த காவலர்களும் துரிதமாக செயல்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த சிறிது நேரத்தில் காயம் பட்டவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினர். 


இவ்வாறு காவல்துறையினருடன் பொதுமக்கள் இணைந்து மனிதாபிமானத்துடன் செயல்பட்டு  காயம் பட்டவர்களை மீட்டது பெரிதும் பாராட்டை பெற்றுள்ளது.

பொதுமக்கள் மனிதநேயத்தை பாராட்டிய திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பா. மூர்த்தி விபத்தில்  உதவியவர்களை நேரில் அழைத்து சான்றிதழ்கள் வழங்கி நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்.

- பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments