தூத்துக்குடியில் வாகனங்கள் பொது ஏலம்!!

    -MMH

தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 35 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோ, 15 நான்கு சக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 51 வாகனங்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் குழு உறுப்பினர்கள் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் சந்திரன், அரசு தானியங்கி பனிமனை உதவியாளர் மகேஷ் பாபு, மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

-அன்சாரி, நெல்லை.

Comments