நீண்ட நாள் குற்றவாளியை சென்னையில் பொறிவைத்துப் பிடித்த சிங்கம்புணரி காவல் துறை!

 -MMH 

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி உப்பு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிகண்டன் (39). இவர் பல வருடங்களாக காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார். இவர் மீது 2 கொலை வழக்குகள், 3 போஸ்கோ வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகள் என ஏகப்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்து வருகின்றது. மேலும் இவர் ரவுடிகள் பட்டியலில் ஏ ப்ளஸ் வகை குற்றவாளியாக இருந்து வருகிறார்.

பிரபல குற்றவாளியாக வலம் வரும் மணிகண்டனை பல காவல் நிலையங்கள் தேடிவரும் நிலையில், சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் சீராளனுக்கு சென்னை மதுரவாயல் பகுதியில் மணிகண்டன் நடமாடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் குகன், முதல் நிலை காவலர்கள் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோருடன் உடனடியாக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. சென்னை விரைந்த தனிப்படை, ஆயுத பூஜையன்று மதுரவாயல் அஷ்டலட்சுமி நகரில் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த மணிகண்டனை கண்டறிந்து சுற்றிவளைத்து பிடித்தனர். 

கண்டுபிடிக்கப்பட்ட மணிகண்டனை சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த சார்பு ஆய்வாளர் குகன் தலைமையிலான காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, திருப்பத்தூர் சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு பல வருடங்களாக தேடப்பட்ட குற்றவாளியை கைது செய்த சிங்கம்புணரி போலீசாருக்கு அனைவரிடமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments