விஜய் வசந்த் எம்.பி ஆபீசில் கலாமுக்கு ஒரு சலாம்...!!

  -MMH

   உழைப்பால் உயர்ந்த நாயகன் கலாமை நாட்டு மக்கள் யாரும் மறந்து விட முடியாது. எளிமையின் சிகரம் கலாம்.

இளைய சமூகத்தின் இதயங்களில் இலட்சிய தீபம் ஏற்றியவர். நம்பிக்கை விதை ஊன்றியவர் கலாம்..!! மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம், விஞ்ஞானி, எழுத்தாளர், கவிஞர், மனித நேய பண்பாளர். சிறுவயதில் சைக்கிளில் சென்று செய்தித்தாள் விற்றவர். சிந்தனையாலும் உழைப்பாலும் உயர்ந்தவர்.

கலாமின் 90வது பிறந்த தினத்தை முன்னிட்டு 15-10-2021 கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்  விஜய்வசந்த் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தலைவர் குமரி முருகேசன், அந்தோணி முத்து, கராத்தே ஸ்டீபன், கண்ணன், ராஜபாண்டியன், ஆறுமுகம், மகாலிங்கம், முருகானந்தம், சேவதள தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments