சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் கொட்டும் மழையில் வாலிபர் கொலை!! காவல்துறையினர் தீவிர விசாரணை!

 -MMH

சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலம், கிழக்குப்பட்டி வடத்திபட்டி ரோட்டில் வசித்து வருபவர் மாணிக்கம் மகன் வேல்முருகன்(26).

நேற்று இரவு சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் வேல்முருகன் அவரது வீட்டிற்கு வெளியே, கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்துள்ளார்.

அவரை, அவரது தம்பி அகிலன், எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வைத்து சிங்கம்புணரி தாலுகா அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். அங்கிருந்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

தகவல் தெரிந்தவுடன் திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டார். எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் விஜயன் வழக்குப்பதிவு செய்து, கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு வாரத்திற்குள் எஸ்.வி.மங்கலம் கிராமத்தில் இரண்டு கொலைகள் நிகழ்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

- ராயல் ஹமீது, அப்துல்சலாம்.

Comments